×

2030ம் ஆண்டுக்குள் விமான பயணிகளின் எண்ணிக்கை 30 கோடியை எட்டும்

ஐதராபாத்: இந்தியாவில் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையானது 2030ம் ஆண்டில் 30கோடியாக அதிகரிக்கும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த விங்ஸ் இந்தியா 2024 என்ற கண்காட்சியின் தொடக்க விழாவில் பேசிய ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ‘‘நாட்டில் தற்போது 149 விமான நிலையங்கள் மற்றும் மிதக்கும் விமான நிலையங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையானது 200 ஆக அதிகரிக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையானது 15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2023ம் ஆண்டில் 15.3கோடியாக இருந்த உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையானது 2030ம் ஆண்டில் 30கோடியாக அதிகரிக்கும்” என்றார்.

The post 2030ம் ஆண்டுக்குள் விமான பயணிகளின் எண்ணிக்கை 30 கோடியை எட்டும் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Civil Aviation Minister ,Jyotiraditya Scindia ,India ,Wings India 2024 exhibition ,Delhi, ,Union Aviation ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...